வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

11/01/2022

நடிகர், பாடகர், இயக்குனர், நடனக்கலைஞர் என பன்முக திறமைகளைக் கொண்டவரான சிலம்பரசன், தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவின் போது நடிகர் சிலம்பரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *