12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மின் மாற்றிகள்..!
எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்து மின்மாற்றிகள்
கரூர் மாவட்டம் லாலாபேட்டை குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டை 12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மின் மாற்றிகள் ஐ எம் எல் ஏ மாணிக்கம் தொடங்கிவைத்தார் குளித்தலை சட்டமன்ற தொகுதி மாயனூர் மின்வாரிய பிரிவுக்குட்பட்ட லாலாபேட்டை கொடிக்கால் தெரு காமன் கோவில் தெரு மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நிலவி வந்தது குறைந்த மின்னழுத்த குறைபாட்டினை சரி செய்ய 4 புதிய மின்மாற்றிகள் 12 லட்சத்துக்கு 4 ஆயிரத்து 850 செலவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிறுவப்பட்ட இதற்கான திறப்பு விழா நடந்தது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்து மின்மாற்றிகள் ஐ திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணி உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் மாயனூர் உதவி பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நல்ல பள்ளி ஊராட்சி தலைவர் சக்திவேல் வரவேற்றார் விழாவில் கட்சி நிர்வாகிகள் ரத்தினம் ராமன் செல்வம் மருதை உட்பட கட்சியின் கட்சியினர் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்