செய்தி: மேலாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர்.பாசி துவக்கி வைத்தார்.

ஈரோடு கோஹினூர் ஹோட்டலில் மார்ச் 13-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தென்னை நார் ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மேலாண்மை திறன் குறித்த 2 நாள் மேலாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியை குசாட் மூத்த ஆசிரிய உறுப்பினர் பேராசிரியர் டாக்டர்.பாசி துவக்கி வைத்தார்,
பொள்ளாச்சிமண்டல அலுவலகம் அஃப்சல். எம்.எம்., வரவேற்புரையாற்றினார். கொச்சி தென்னை நார் வாரிய H.O.ஜார்ஜ்ஆபிரகாம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு மாநில காயர் சங்க கூட்டமைப்பு செயலாளர் பூச்சாமி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் தனசேகரன் கலந்து கொண்டு பேசினார். பொள்ளாச்சி மண்டல அலுவலகம் ராம்கிஷோர் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுற்றது.