செய்தி: ஸ்ரீ குலவிளக்கு அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு சிவகிரி துரைசாமியின் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை காளமங்கலம் கிராமம் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குலவிளக்கு அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு சிவகிரி துரைசாமியின் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழரின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.