5 விக்கெட் வீழ்த்தி அசத்திய பும்ரா – தென் ஆப்பிரிக்காவை 210 ரன்களில் சுருட்டியது இந்தியா

12/01/2022

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். புஜாரா 43 ரன்களும், ரிஷப் பண்ட் 27 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். டெம்பா பவுமா 28 ரன்களும், கேசவ் மகராஜ் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *