50 ஆண்டுகளுக்குப் பின் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு விழா
மதுரை மாவட்டம் பரவையிலுள்ள ஆகாஷ் குடும்ப இனப்பில் மதுரை கல்லூரி நண்பர்கள் நட்பின் பொன் விழாக் கூடல் நடைபெற்றது.
இந்த விழாவில் மதுரை கல்லூரியில் 1971 – 1974 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா ஆண்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு 2022 ஆம் சந்திப்பு விழா நடத்தி தங்களுடைய கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களின் நினைவு கூறும் வகையில் முன்னாள் கல்லூரி மாணவர்களின் சந்திப்பு விழாவில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.
இந்த விழாவில் முன்னாள் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்தானம்,, டிஎஸ்பி க்கள்.கணேசன், மரகத சுந்தரம், அக்கௌன்ட் ஆடிட்டர் லெனின் சுப்பையா, ராமமூர்த்தி, அசோகன், உட்பட ஏராளமான முன்னாள் கல்லூரி மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து தங்களுடைய கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மதுரை, சென்னை, திருநெல்வேலி, திருச்சி,ஓசூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த முன்னாள் கல்லூரி மாணவர்களின் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.