RT-PCR பரிசோதனை மையங்கள், முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள், கோவிட்-பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை-மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்
RT-PCR பரிசோதனை மையங்கள், முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள், கோவிட்
பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை
மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என
அரசு முதன்மைச் செயலாளர் சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
.
கோவிட் தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவல் அதிகரித்து
வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தொற்றினை
கட்டுப்படுத்தவும், தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பல்வேறு விதமான
தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சியின் RT-
PCR பரிசோதனை மையங்கள், கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட
உடற்பரிசோதனை மையங்கள் (Screening Centers), கோவிட் பாதுகாப்பு மையங்கள் மற்றும்
கோவிட் தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்
வகையில் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தடவல் மாதிரி சேகரிப்பு மையங்கள் (Swab collection centers)
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், ஆரம்ப
நிலையில் கோவிட் தொற்று பாதிப்பை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை உடனடியாக
மேற்கொள்ளும் நோக்கிலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து
தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. சளி, காயச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கோவிட்
தொற்றின் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு RT-PCR பரிசோதனை
மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த
நபர்களுக்கும் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை
மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கட்டணமில்லாமல் கோவிட் தொற்று
பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 160 தடவல் மாதிரி சேகரிப்பு
மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் சேகரிக்கப்படும் தடவல் மாதிரிகள்
RT-PCR பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் மாநகராட்சி
சுகாதாரத்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு 24 மணிநேரத்திற்குள்
தெரியப்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் (Screening Centers)
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 21 முதற்கட்ட
உடற்பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் தொற்று பாதித்த
நபர்களுக்கு இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,
தொற்றின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது கோவிட்
பாதுகாப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள
அறிவுறுத்தப்படும்.
கோவிட் பாதுகாப்பு மையங்கள் (Covid Care Centers)
கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தொற்று பிறருக்கு பரவுவதை
தடுக்கும் வகையில் அவர்கள் பொதுசுகாதாரத்துறை வெளியிட்டு வழிகாட்டு
நெறிமுறைகளின்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று பாதித்த
ஒருவருக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லாத நிலையில், கோவிட்
பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். பெருநகர சென்னை
மாநகராட்சியின் சார்பில் 4 கோவிட் பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளது.
இம்மையங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சை
அளிக்கப்படும். மேலும், இம்மையங்களில் தொற்று பாதித்த நபர்களுக்கு தேவையான
உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும்.
கோவிட் தடுப்பூசி மையங்கள்
கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று
ஆகியவற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி ஒன்றே சிறந்த
தீர்வு. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி
பெற முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் கோவிட் தடுப்பூசியை விரைந்து செலுத்த
ஏதுவாக மாநிலத்தில் இதை ஒரு பேரியக்கமாக மாற்றி வாரந்தோறும் கோவிட் மெகா
தடுப்பூசி முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மாநகராட்சியின்
சார்பில் வார இறுதி நாட்களில் 1600 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு
முகாம்களும், இதர நாட்களில் மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார
நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு
வருகிறது.
எனவே, கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள், தொற்று பாதித்த நபர்களுடன்
தொடர்பில் இருந்த நபர்கள் RTPCR பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று பாதித்த
நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளும்
வசதியில்லாத நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சியின் கோவிட்
பாதுகாப்பு மையங்களின் அமைவிடத்தை தெரிந்து கொள்ளவும் மற்றும் கோவிட் தடுப்பூசி
செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசி மையங்களின் விவரங்களை அறிந்து
கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின்
http://covid19.chennaicorporation.gov.in/covid/home/ என்ற இணையதள இணைப்பில்
சென்று அறிந்து கொண்டு பயனடையுமாறு அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர
சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி